சுற்றி வளைத்து ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! சந்தோஷத்தில் கண்கலங்கிய அஸ்வின்! நெகிழ்ச்சி வீடியோ!!

சுற்றி வளைத்து ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! சந்தோஷத்தில் கண்கலங்கிய அஸ்வின்! நெகிழ்ச்சி வீடியோ!!


aswin-with-fan-moment-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவு உள்ளது. இதில் கலந்து கொண்ட பலரும் தற்போது பெரும் பிரபலங்களாக உள்ளனர்.  குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. 

அதில் அஸ்வின், பாபா பாஸ்கர் ஷகிலா, கனி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும் பாலா, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோர் கோமாளிகளாக ரகளைகள் செய்து வருகின்றனர்.  இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது முழுத் திறமையையும் காட்டி பெருமளவில் பிரபலமானவர் அஸ்வின்.

 இவர் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்து இருந்தார்.  அவர் ஏராளமான விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதனை தெரிந்து கொண்ட ஏராளமான ரசிகர்கள் அவரை சுற்றிவளைத்து அன்பு மழையை பொழிந்துள்ளனர். மேலும் பாடல் பாடி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இதனைக் கண்டு நெகிழ்ந்து போன அஸ்வின் கண்கலங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.