ப்பா.. அடுத்த ஹீரோயின் ரெடி! செம க்யூட்டாக இருக்கும் அசுரன் நாயகியின் மகளை பார்த்தீங்களா!!

ப்பா.. அடுத்த ஹீரோயின் ரெடி! செம க்யூட்டாக இருக்கும் அசுரன் நாயகியின் மகளை பார்த்தீங்களா!!


asuran-movie-actress-daughter-photo-viral

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ராஜ்ஜியம் என்ற திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலம் அடைந்தவர் நடிகர் திலீப். இவர் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலீப்பும் பிரபல நடிகையான மஞ்சு வாரியரும் கடந்த 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாக்ஷி என்ற மகள் உள்ளார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திலீப் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். பின்னர் நடிகர் திலீப் 2016-ல் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

திலீப் மற்றும் மஞ்சு வாரியரின் வாரிசான மீனாக்ஷி சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்க கூடியவர். இந்நிலையில் அவர் தற்போது சிவப்பு உடையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்டு செய்து வருகின்றனர்.