தனது பிரமாண்ட வெற்றியை கூட கொண்டாட முடியாமல் இருக்கும் நடிகர் தனுஷ்! காரணம் என்ன தெரியுமா?

தனது பிரமாண்ட வெற்றியை கூட கொண்டாட முடியாமல் இருக்கும் நடிகர் தனுஷ்! காரணம் என்ன தெரியுமா?


asuran-dhanush-success

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் தான் அசுரன். தொடர்ந்து வெற்றியை சந்தித்து வரும் தனுஷ்க்கு இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இப்படி பல சாதனைகள் படைத்தாலும் நடிகர் தனுஷ்சால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை.

Dhanush

அதற்கு காரணம் அவர் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் செம பிஸியாக நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ், செல்வராகவன் படத்தில் நடிக்கவுள்ளார். 

இவ்வாறு கடுமையாக உழைத்து வரும் தனுஷ்க்கு தனது பட வெற்றியை கொண்டாட நேரம் இல்லாமல் உழைத்து வருகிறார். அதற்கு தனுஷ் ரசிகர்கள் நடிகர் தனுஷ்க்கு வெற்றியை கொண்டாட நேரம் இல்லை என்றாலும் நங்கள் கொண்டாடுகிறோம் என கூறி கொண்டாடி வருகின்றனர்.