இந்தியா சினிமா

இளம் கவர்ச்சி நடிகை திடீர் தற்கொலை! அலறல் சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அபார்ட்மெண்ட்!

Summary:

Aspiring TV actress pearl punjabi commits suicide by jumping off terrace

என்னதான் சினிமா துறையில் பிரபலமாக இருந்தாலும் அவர்களும் சாதாரண மனிதர்கள் போல ஒரு பிரச்சனை என்றதும் தற்கொலை முடிவுக்கு சென்றுவிடுகின்றனர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம் பெண் நடிகை ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் வசித்துவரும் பியர்ல் பஞ்சாபி என பெயரிடப்பட்ட இளம் நடிகை ஒருவர் தன்னிடம் அழகு, கவர்ச்சி, வயது அனைத்தும் இருந்தும் தன்னால் சினிமாவில் சாதிக்கமுடியவில்லை என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அடிக்கடி தனது தாயிடம் சண்டையும் போட்டு வந்துள்ளார்.

மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்த நடிகை நேற்று இரவு 12.53 மணிக்கு தான் தங்கியிருந்த அப்பார்ட்மென்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது இரவு என்பதால் யாரும் சரியாக கவனிக்கவில்லை என்றும் ஆனால், அவர் இறந்த நேரம் பயங்கரமான அலறல் சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளனர்.

இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement