60 வயதில் இளம்பெண்ணை 2வது திருமணம்.! விக்ரம் பட வில்லனின் வைரல் காரியம்.!

60 வயதில் இளம்பெண்ணை 2வது திருமணம்.! விக்ரம் பட வில்லனின் வைரல் காரியம்.!


asish-vidhyarthi-married-an-young-woman-at-the-age-of-6

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. தில் திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தளபதி விஜய்க்கு வில்லனாக  தமிழன் மற்றும் பகவதி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த கதாபாத்திரமும் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு பெற்ற ஒன்று. தமிழ் மொழி மட்டுமல்ல அதே தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் இவர்.

asishvidhyarthi

தற்போது பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்.  இந்நிலையில் இவர் அஸாமைச் சார்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். இவர்களது திருமணம்  நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக நடைபெற்று இருக்கிறது.

asishvidhyarthi

60 வயதை கடந்த ஆஷிஷ் வித்யார்த்தி ஏன்  இன்னொரு திருமணம் செய்தார் என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர்  நான் ரூபாலியுடன்  கடந்த சில வருடங்களாக நட்புறவிலிருந்து. நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம் எங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல திருமணம் செய்து இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.