ஆத்தி.. கடும் குளிரில் 20 அடி ஆழத்தில் நீருக்குள் நடிகர் ஆர்யா - கிளைமாக்ஸ் சீன் குறித்து மனம்திறந்து பேச்சு..!!

ஆத்தி.. கடும் குளிரில் 20 அடி ஆழத்தில் நீருக்குள் நடிகர் ஆர்யா - கிளைமாக்ஸ் சீன் குறித்து மனம்திறந்து பேச்சு..!!


Arya speech about captain movie

நடிகர் ஆர்யாவின் நடிப்பில், சக்தி சௌந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் விண்வெளி மற்றும் வேற்றுகிரக உயிரினம் தொடர்பான கதையம்சம் கொண்டது. இப்படத்தில் பல சவாலான சண்டை காட்சிகளும் இடம்பற்றுள்ளன. 

கேப்டன் படம் தொடர்பாக நடிகர் ஆர்யா கூறுகையில், "கேப்டன் படம் புதுமையானதாக இருக்கும். எனக்கும் 120 அடி உயரம் கொண்ட வேற்றுகிரக உயிரினத்திற்கும் இடையே நடக்கும் சண்டைகாட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை படமாக்குவது பயங்கரமான சவாலாக இருந்தது. 

Actor Arya

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மூணாறில் படம்பிடித்தபோது கடுமையான குளிர்காலம். மழை காலத்தில் படப்பிடிப்பும் சவாலாக இருந்தது. பின்னர், ஜனவரி மாதம் மும்பையில் 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. படக்குழு அனைவர்க்கும் நன்றிகள்" என்று தெரிவித்தார்.