சினிமா

விஷால் - ஆர்யா இனைந்து நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு.. மிரட்டும் டைட்டில் போஸ்டர்.. படம் பெயர் என்ன தெரியுமா?

Summary:

ஆர்யா மற்றும் விஷால் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்திற்கு படக்குழு எனிமி (ENEMY) என பெயர் வைத்துள்ளது.

ஆர்யா மற்றும் விஷால் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்திற்கு படக்குழு எனிமி (ENEMY) என பெயர் வைத்துள்ளது.

நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது பெரும்பாலும் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒன்றாகா இணைந்து அவன் இவன் என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆர்யா விஷால் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து புது படம் ஒன்றில் நடித்துவருகின்றனர். இந்த படத்தை இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் அவர்கள் இயக்கி வருகிறார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டப்மாஷ் புகழ் மிர்னாலினி ரவி நடித்துவருகிறார்.

படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு படக்குழு தற்போது எனிமி (ENEMY) என பெயர் வைத்துள்ளது. படத்தின் பெயர் மிகவும் வித்தியாசமாக இருக்கும் நிலையியல் படத்தின் போஸ்டரை நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement