சினிமா

திரைபிரபலங்கள் கலந்துகொள்ளும் ஆர்யா-சாயிஷா திருமணம்! புகைப்படம்

Summary:

Arya and Sayyesa sankith photos

ஆர்யா-ஆயிஷாவிற்கு இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடக்க இருக்கிறது இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பலமாக நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உறவினர்கள், சில பிரபலங்கள் கலந்து கொள்ள நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். இவரது நடிப்பில் வந்த ராஜா ராணி என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை. 

இந்த நிலையில், கஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடன் ஜோடி சேர்ந்த சாயிஷாவை வாழ்க்கை துணையாக தேர்வு செய்துள்ளதாக காதலர் தினத்தன்று ஆர்யா உறுதி செய்தார். மேலும், இப்படத்தின் மூலம் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உறவினர்கள், சில பிரபலங்கள் கலந்து கொள்ள நடந்துள்ளது. இதில் பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகர் சஞ்சய் தத் மற்றும் சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகை சாயீஷா பாலிவுட் பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் அஜித், விசால், சூர்யா, கார்த்தி, அல்லு அர்ஜுன், வரலட்சுமி மற்றும் பாலிவுட் பிரபலங்கள் சஞ்சய் தத், ஆதித்யா பஞ்சோலி, அஞ்சு மகேந்திரு ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். 


Advertisement