சினிமா

செம தில்லுதான்! கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ஒத்த ஆளாக நடிகர் அருண்பாண்டியனின் மகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா!

Summary:

Arunpandian daughter got snake in her house

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் ஆக்சன் ஹீரோவாக கலக்கி முன்னணி நடிகராக இருந்தவர் அருண்பாண்டியன். அவரது மகள் கீர்த்தி பாண்டியன். அவர் சமீபத்தில் வெளியான தும்பா  திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 

 மேலும் இவர் மலையாளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் தந்தை அருண்பாண்டியனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏராளமான நடிகைகள் கரப்பான்பூச்சி, பல்லி என்றாலே பயந்து நடுங்கும் நிலையில் கீர்த்தி தனி ஆளாக பாம்பு பிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கீர்த்தி பாண்டியன் தனது வீட்டில் நுழைந்த பாம்பை சாமர்த்தியமாக பிடித்து, அதனை ஒரு பக்கெட்டில் போட்டு அதை வெளியே எடுத்து சென்றுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 


Advertisement