ரொம்ப நன்றி! இது தொடரட்டும்.. ரசிகர்கள் செய்த அசத்தலான காரியம்! நெகிழ்ச்சியுடன் அருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
விவேக் நடிகர் மட்டுமின்றி சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர். மேலும் மரம் நடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். அது மட்டுமின்றி தனது ரசிகர்களையும் மரம் நட வலியுறுத்துவார். நடிகர் விவேக்கிற்கு ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பது கனவு. இந்நிலையில் அவர் காலமானதை தொடர்ந்து இவை நினைவாக்க பல அமைப்புகளும்ரசிகர்களும் மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி!!🙏
— ArunVijay (@arunvijayno1) April 18, 2021
இது தொடரட்டும்... pic.twitter.com/1pLN1NQHzy
இந்த நிலையில் நடிகர் அருண் விஜய்யின் ரசிகர்களும் மரம் நட்டுள்ளனர். இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர் என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி. இது தொடரட்டும் என பதிவிட்டுள்ளார்.