அச்சோ.. உங்களுக்குமா! நடிகர் அருண் விஜய் வெளியிட்ட ஷாக் தகவல்! வருத்தத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் அருண் விஜய். முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்த நிலையிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு முன்னணி நடிகராக வலம்வர முடியாமல் போராடினார். இந்த நிலையில் அருண்விஜய் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அவரது கைவசம் பார்டர், ஓ மை டாக், அக்னி சிறகுகள், பாக்சர், சினம், யானை போன்ற பல படங்கள் உள்ளன. இந்த நிலையில் அருண் விஜய் தற்போது தனக்கு கொரனோ தொற்று உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Hi everyone!!
— ArunVijay (@arunvijayno1) January 5, 2022
This is to inform you'll that I have been tested positive for COVID-19. I am currently under home quarantine and following all the safety protocols as per my doctor's advice.
Thanks for all the love..
Stay safe & take care everyone 🙏🏽
அதில் அவர், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். அனைவரது அன்புக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.