படப்பிடிப்பு தளத்தில் திடீர் பரபரப்பு!! அருண் விஜய்க்கு என்ன ஆச்சு??

படப்பிடிப்பு தளத்தில் திடீர் பரபரப்பு!! அருண் விஜய்க்கு என்ன ஆச்சு??


Arun Vijay Injurie on shooting spot

படப்பிடிப்பின்போது நடிகர் அருண் விஜய் காயமடைந்த சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கடந்த சில நாட்களாக ராமேஸ்வரத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் அருண்விஜய் நடித்துக்கொண்டிருந்தபோது அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

arun vijay

இதனால் அவர் அடுத்த 5 நாட்களுக்கு எடை அதிகம் உள்ள பொருட்களை தூக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், தனது சண்டை காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டு அருண் விஜய் தற்போது ஓய்வெடுத்துவருகிறாராம்.

இந்த படத்தில் யாருனு விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, அம்மு அபிராமி, தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்து வருகின்றனர் ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.