சினிமா

பட்டு வேட்டி சட்டையில் தனது குடும்பத்துடன் நடிகர் அருண்விஜய்! அவரது மகள் எவ்ளோ அழகு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால

தமிழ் சினிமாவில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பின்னர் பெருமளவில் பிரபலமாகி, தற்போது பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவர் இறுதியாக மாபியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து அவர் கைவசம் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. மேலும் அருண் விஜய் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் நடிகர் விஜயகுமாரின் மகனாவார். அருண்விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு புர்வீ என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் அருண் விஜய் பட்டுவேட்டி சட்டையில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Advertisement