சினிமா

பிரபல மேடையில் நடிகர் விஜய் பற்றி பேசிய பிரபலம்! கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது!

Summary:

Arun raaja kamaraj talks about vijay

தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் இடத்தை பிடித்துள்ளவர் தளபதி விஜய். நாளைய தீர்ப்பு என்று திரைப்படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய விஜய் இன்று சர்க்கார் வரை வளர்ந்துள்ளார். தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் என்றாலே அமைதியானவர், மிகவும் பொறுமையானவர் என அவரது புகழ் பற்றி பல பிரபலங்கள் சொல்ல கேட்டிருப்போம். இந்நிலையில் தற்போது விஜய் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் பாடகர், பாடலாசிரியர், நடிகர் அருண் ராஜா காமராஜ்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சினிமாவிற்கான விருதுவழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பாடகர், பாடலாசிரியர், நடிகர் அருண் ராஜா இயக்கத்தில் வெளியான கனா படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதற்கு நன்றி சொல்லும் போது மேடையில் பேசிய ராஜா, இந்த படத்தை நான் விஜய் சாருடன் சேர்ந்து பார்த்தேன். அப்போது அவர் இது தான் உங்கள் முதல் படமா என கேட்டார். மேலும் அப்படத்தை மிகவும் ரசித்து பார்த்தாராம். டைட்டில் கார்டில் என்னுடைய பேர் வந்தபோது அவர் கைதட்டினார். வாழ்க்கையில் இதை தவிர சிறந்த விருது வேறென்ன இருக்கிறது என கூறியுள்ளார்...


Advertisement