13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
வாவ்...செம க்யூட்..தனது மகன், மகளுடன் செல்பி எடுத்த ஏ.ஆர்.ரகுமான்...வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிளிலும், ஏராளமான படங்களுக்கு இசையமைத்து தற்போது இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
மேலும் இவர் ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.மேலும் இவர் பார்க்காத மேடை இல்லை.அதேபோல் சந்திக்காத பிரபலங்களும் இல்லை. இருந்தாலும் மிகவும் எளிமையாக இருப்பார். அண்மையில் அவரது இசையமைப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருக்கிறது. படத்தின் இசை உருவாகும் விதத்தை கூட சமீபத்தில் அவர் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனது மகன், மகளுடன் எடுத்து கொண்ட க்யூட் செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.