BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தர்பார் பிரச்சினை! போலீஸ் பாதுகாப்பு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்!
தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் போலீஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தர்பார் பட விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்த தர்பார் படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்தது. ஆனால் தர்பார் படத்தை வாங்கிய தங்களுக்கு நஷ்டம் மட்டுமே என்று வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு முருகதாஸின் அலுவலகம், ரஜினியின் வீட்டிற்கு சென்றார்கள். இந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தர்பார் படத்தால் நஷ்டம் என்று கூறி வரும் விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதால் தனக்கும், தனது படப்பிடிப்புக்கும் இடைஞ்சல் ஏற்படலாம் என கருதுவதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி உள்ளார்.