அப்படியே மெய்மறந்து போவீங்க.. ஐஸ்வர்யா ராய் போல் நடனம் ஆடி அசத்திய நடிகர் அர்ஜுனின் மகள்....! குவியும் லைக்குகள்...

அப்படியே மெய்மறந்து போவீங்க.. ஐஸ்வர்யா ராய் போல் நடனம் ஆடி அசத்திய நடிகர் அர்ஜுனின் மகள்....! குவியும் லைக்குகள்...


arjun-daughter-iswarya-dance-video

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனது ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அர்ஜுன். குறிப்பாக நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.

நடிகர் அருஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை படத்தில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்திருந்தார். பிரபலத்தின் மகள் என்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில் அவ்வாறு பெரியளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது பெரிதும் படங்களில் நடிக்காமல் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், அவ்வப்போது தனது  இன்ஸ்டாரக்ராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை  கவர்ந்து  வருகிறார். அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தூம் 4 படத்தில் நடனம் ஆடியிருந்தது போல், அச்சு அசல் அப்படியே அசத்தலாக நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.