சினிமா

கடைசி நாள் ! மிகவும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய நடிகர் அரவிந்த்சாமி! அதுவும் யாருக்கு,ஏன் பார்த்தீர்களா!!

Summary:

நடிகர் அரவிந்த்சாமி தன்னை எம்.ஜி.ஆராக மாற்றிய மேக்கப் மேனுக்கு படப்பிடிப்பு கடைசி நாளில் நன்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. இவர் தனிஒருவன் படத்தின் மூலம் மாஸ் ரீஎண்ட்ரி கொடுத்து, தொடர்ந்து ஹிட்டான பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

கொரோனா பரவலால் இப்படத்தின்  படப்பிடிப்புகள் சில காலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று எம்ஜிஆராக நடித்து வந்த அரவிந்த்சாமியின் படப்பிடிப்பும் முடிந்தது. இந்நிலையில் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை எம்ஜிஆர் தோற்றத்திற்கு மாற்றிய மேக்கப்மேன் ரஷீத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர், புரட்சித் தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு அருகில் என்னைக் கொண்டுசெல்ல முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை, இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார், கடைசி நாள் படப்பிடிப்பு என பதிவிட்டுள்ளார்.
 


Advertisement