தளபதி 68 படத்தில் இணையும் முக்கிய வில்லன் நடிகர்.. வெளியான தகவல்.!

தளபதி 68 படத்தில் இணையும் முக்கிய வில்லன் நடிகர்.. வெளியான தகவல்.!



Aravind Samy in thalapathi 68 movie

தளபதி 68 திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Thalapathi 68

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இந்தா திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் சினேகா மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Thalapathi 68

இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.