விஜய் டீவி அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாம்! அதுவும் என்ன குழந்தை தெரியுமா?

விஜய் டீவி அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாம்! அதுவும் என்ன குழந்தை தெரியுமா?


Arandhangi nisha blessed with girl baby

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பபலமானவர் அறந்தாங்கி நிஷா. பழனி என்பவருடன் இவர் இணைத்து செய்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது.

இந்நிலையில் கர்பமாக இருந்த நிஷாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஏற்கனவே இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என ஆசையுடன் கூறியிருந்தார் நிஷா.

இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிஷாவுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. அதுவும், அவர் எதிர்பார்த்தது போலவே பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயர் வைத்திருப்பதாக நிஷா தெரிவித்துள்ளார்.