அடேங்கப்பா... வேற லெவல் தான்..பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக்குத்து பாடல் 24மணி நேரத்தில் படைத்த சாதனை ! என்னனு நீங்களே பாருங்க...

அடேங்கப்பா... வேற லெவல் தான்..பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக்குத்து பாடல் 24மணி நேரத்தில் படைத்த சாதனை ! என்னனு நீங்களே பாருங்க...


arabic-kuthu-song-24-hr-views-in-sun-pictures

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி  விஜய் நடிப்பில் பிரமாண்டாமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அவர்களுடன் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் ஒன்றாக இருக்கும் அரபிக்குத்து பாடல்  நேற்று மாலை  6 மணிக்கு வெளியிடப்பட்டது. விஜய்யின் மிரட்டலான நடனமும், அனிருத் வேற லெவல் இசையிலும் வெளியான இப்பாடல்  மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அரபிக் குத்து பாடல் 24 மணிநேரத்தில் பெற்றுள்ள பார்வையாளர்கள் குறித்த தகவலை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இப்பாடல் 24 மணிநேரத்தில் 25+ மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் தற்போது 24 மணிநேரத்தில் தென்னிந்தியளவில் அதிக பார்வைகளை குவித்த பாடலாக அரபிக் குத்து சாதனை படைத்துள்ளது.