"என்னை பற்றி வதந்திகளை பரப்பாதீர்கள்" இணையவாசிகளால் கடுப்பான ஏ ஆர் ரகுமான்..

"என்னை பற்றி வதந்திகளை பரப்பாதீர்கள்" இணையவாசிகளால் கடுப்பான ஏ ஆர் ரகுமான்..


Ar Rahman twit post viral

இசையமைப்பாளர் ஏ .ஆர் .ரஹ்மான் இசையில் இந்தவருடம் பொன்னியின் செல்வன்-2, பத்து தல,மாமன்னன் ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

rahman

தற்போது மணிரத்னம் இயக்கத்தில்,கமல் நடிக்கும்  படத்துக்கு ரஹ்மான் தான் இசையமைக்கிறார். மேலும் தனுஷ் தமிழில் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கும் , ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கும் " தேரே இஷ்க் மெய்ன் " என்ற ஹிந்தி படத்திற்கும் இசைசையமைக்கிறார்.

இந்நிலையில், 'டாடா' படத்திற்குப் பிறகு கணேஷ் பாபு இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு,ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக செய்திகள் வந்தது. இதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த ரஹ்மான், " அந்த செய்தியில் உண்மையில்லை. அது வதந்தி.!" என்று பதிவிட்டிருந்தார்.

rahman

மேலும், சிம்புவின் 48வது படத்திற்கு ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்று ஒரு செய்தி நிறுவனம் செய்தி  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கேள்விக்குறியைப் பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.