சினிமா

AR ரஹ்மானின் மனைவி மற்றும் இரு மகள்களை பாத்துருக்கீங்களா? புகைப்படம் இதோ!

Summary:

AR Rahman shared his family photo on twitter

தனது இசையால் தமிழ் சினிமாவை மட்டும் இல்லாது இந்த உலகத்தையே தன் கைக்குள் கொண்டுவந்தவர் இசை அமைப்பாளர் AR ரஹ்மான். தமிழ் சினிமாவில் இளையராஜாவை அடுத்து அதிக ரசிகர்களை கொண்டவர் AR ரஹ்மான். இவர் வாங்கிய ஆஸ்கார் விருது இந்திய சினிமாவுக்கே கிடைத்த மிகப்பெரிய பெருமை.

தற்போது இயக்குனர் அட்லீ, தளபதி வியாஜய் இணைந்துள்ள தளபதி 63 படத்திற்கு இசை அமைத்து வருகிறார் இசை புயல் AR ரஹ்மான் அவர்கள். இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தனது குடும்பு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் AR ரஹ்மான்.

அண்மையில் ஏ.ஆர். ரகுமானின் ஆஸ்கர் விருது தினத்தை முன்னிட்டு மும்பையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. அதில் ரகுமானின் மகள் கலந்துகொண்டு தனது அப்பா பற்றி நெகிழ்ந்து பேசினார், ஆனால் ஒரு சர்ச்சையும் வெடித்தது. முகத்தை முழுவதும் மூடியபடி அவர் நிகழ்ச்சிக்கு வந்தது பிரச்சனை ஆனது.

இந்நிலையில் அம்பானியின் மனைவி நீதா அம்பானியுடன் தனது மனைவி மற்றும் மகள்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் AR ரஹ்மான். 


Advertisement