இப்படியும் ஒரு ரசிகரா? ஏ.ஆர் ரகுமானையே பிரமிக்க வைத்து மாஸ் காட்டிய இளைஞர்!! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களுக்கு வித்தியாசமான முறையில் இசையமைத்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம்,மலையாளம் என பல மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இசைப்புயல் என ரசிகர்களால் பெருமையோடு அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமான் ஏராளமான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார்.இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந் நிலையில் ஏ. ஆர் ரகுமானின் ரசிகர்களும் ஒருவரான சந்தர் என்பவர் புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அதன் நம்பர் பிளேட்டில் அவர் ஐ லவ் யூ ஏஆர்ஆர் என மாற்றி அமைத்துள்ளார். மேலும் சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்கள் இசையால் எனது வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி. நன் என்றும் உங்களுக்கு பெரிய ரசிகனாக இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவினை கண்ட ஏ ஆர் ரகுமான் அவர்கள் கவனமாக பாதுகாப்பாக வண்டி ஓட்டவும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
Drive safely 😊 https://t.co/NPkYBETTLb
— A.R.Rahman (@arrahman) 18 May 2019