தந்தைக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஏஆர் ரஹ்மான் மகள்! வலைதளத்தில் பரபரப்பு

தந்தைக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஏஆர் ரஹ்மான் மகள்! வலைதளத்தில் பரபரப்பு


ar-rahman-daughter-replies-about-father

அண்மையில் ஏ.ஆர். ரகுமானின் ஆஸ்கர் விருது தினத்தை முன்னிட்டு மும்பையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. அதில் ரகுமானின் மகள் கலந்துகொண்டு தனது அப்பா பற்றி நெகிழ்ந்து பேசினார், ஆனால் ஒரு சர்ச்சையும் வெடித்தது. முகத்தை முழுவதும் மூடியபடி அவர் நிகழ்ச்சிக்கு வந்தது பிரச்சனை ஆனது.

ரஹ்மான் தனது குழந்தைகளை சுதந்திரமாக இருக்கவிடுவதில்லை என்றும் அவர்களை மிகுந்த கட்டுப்பாடுடன் நடத்துகிறார் என்றும் அவர்கள் விருப்பப்படி ஆடை அணிய விடுவதில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் அம்பானியின் மனைவி நீதா அம்பானியுடன் தனது மனைவி மற்றும் மகள்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் AR ரஹ்மான். இந்த புகைப்படத்தில், ரஹ்மானின் இரண்டாவது மகளும், மனைவியும் பர்தா அணியவில்லை. கதீஜா மட்டும் பர்தா அணிந்துள்ளார். 

அதேப்போன்று கதீஜா தனது பேஸ்புக்கில், நானும், அப்பாவும் மேடையில் தோன்றி பேசியது இவ்வளவு சர்ச்சையாகும் என எதிர்பார்க்கவில்லை. நான் அணிந்த பர்தா என் தந்தையின் வற்புறுத்தலால் நடந்தது என்றும், அவர் உள் ஒன்று, வெளி ஒன்று என இரட்டை நிலைபாடு கொண்டவர் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

நான் உடுத்தும் உடை மற்றும் என் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கும் என் பெற்றோருக்கும் தொடர்பில்லை. என் சுயவிருப்பத்துடன் தான் பர்தா அணிகிறேன். எனக்கு எது வேண்டுமென்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளேன். எந்தவொரு மனிதனுக்கும், அவர்கள் விரும்பியதை அணிகிற சுதந்திரம் உள்ளது. அதைத்தான் நானும் செய்கிறேன். விவரம் தெரியாமல் யாரையும் எடை போடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

AR Rahman