"ஷாருக்கான் வேணாம் சிவகார்த்திகேயன் போதும்" கதையை மாற்றி அமைத்த ஏ ஆர் முருகதாஸ்..

"ஷாருக்கான் வேணாம் சிவகார்த்திகேயன் போதும்" கதையை மாற்றி அமைத்த ஏ ஆர் முருகதாஸ்..


AR MURUGADAS CHANGED HIS STORY FOR SIVAKARTHIKEYAN

2001ம் ஆண்டு "தீனா" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இவர், தமிழின் முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார்.

Siva

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படங்களை இயக்கி வரும் ஏ ஆர் முருகதாஸ், இயக்குனராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியராகவும், படத்தயாரிப்பாளராகவும் உள்ளார். 2020ம் ஆண்டு ரஜினியை வைத்து இவர் இயக்கிய "தர்பார்" படம் தோல்வியைத் தழுவியது.

அதன்பிறகு சிலவருடங்களாக படங்களை இயக்காமல் இருந்து வந்த ஏ ஆர் முருகதாஸ், தற்போது ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில், இவர் சிவகார்த்திகேயனை வைத்துப் படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Siva

ஸ்பைடர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின்  கதையை, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷாரூக்கானுக்காக எழுதியதாகவும், தற்போது அந்த கதையை சிவகார்த்திகேயனுக்கு ஏற்றார் போல் மாற்றி எழுதி இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.