சினிமா

அனுஷ்காவின் க்ரைம் த்ரில்லர் படமான சைலன்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறதா?? அதுவும் எப்போது தெரியுமா? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Summary:

Anushka silence movie released in october 2

சமீப காலமாக கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், ரிலீசுக்கு தயாராக இருந்த சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. மேலும் இதுவரை பொன்மகள் வந்தாள், பென்குயின், டேனி மற்றும் லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. மேலும் அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ. ரணசிங்கம் அக்டோபர் 2ம் தேதியும்,
சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதியும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து சைலன்ஸ் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஹேமன் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைலன்ஸ். இப்படத்தின் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார். கோபி சுந்தர்  இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷெனியல் டியோ என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கிரைம் மற்றும் திரில்லர் படமான சைலென்ஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளிவந்தநிலையில், தற்போது அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று படம் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.


Advertisement