சினிமா

அய்யோ போச்சே! அவசரப்பட்டு பல கோடிக்கணக்கில் சொத்தை இழந்த நடிகை அனுஷ்கா! வெளியான ஷாக் தகவல்!

Summary:

anushka loss crores in real estate

தமிழ் ,தெலுங்கு என பல மொழிகளிலும், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து மாபெரும் பிரபலமாக இருப்பவர் நடிகை அனுஷ்கா.ஆரம்பத்தில்  கவர்ச்சியாக நடித்து வந்த இவர், அதனை தொடர்ந்து கதாநாயகிகளுக்கு மிக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.அவ்வாறு அவர் நடித்த அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது

இந்நிலையில் நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உடல் எடை அதிகரித்தார். அதனை தொடர்ந்து அவர் உடல் எடையை குறைப்பதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும் வெளிநாட்டிற்கு சென்று பல சிகிச்சைக்குப் பிறகு உடல் எடையை குறைத்தார். ஆனாலும் அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காதநிலையில் அவர் தற்போது தமிழில் மாதவனுக்கு ஜோடியாக சைலண்ட் என்ற படத்திலும் நிசப்தம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.மேலும் பிரபாஸ்க்கு ஜோடியாக ஒரு படத்திலும் கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா சிலரது பேச்சை கேட்டு ஹைதராபாத்தில் முக்கியமான இடத்தில் நான்கு அறைகள் கொண்ட வீட்டை 11 கோடியே 50 லட்சத்திற்கு வாங்கினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ஏற்பட்ட சொத்து மதிப்பு பிரச்சினையால் அவர் அந்த வீட்டை அவசரஅவசரமாக 5 கோடிக்கு விற்றார். இதனால் அவருக்கு ஆறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 

பின்னரும் அவர் விசாகப்பட்டினத்தில் அவசர அவசரமாக நிலம் ஒன்றை வாங்கினார். பின்னர் அமராவதியை தலைநகரமாக முயற்சி செய்து வரும் நிலையில் விசாகப்பட்டினத்தில் நிலத்தின் விலை உயராது என எண்ணிய அவர் அதையும் விற்றார. இதனால் அவருக்கு மீண்டும் பெரும்  இழப்பு ஏற்பட்டது.  அனுஷ்காவுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மிகுந்த கவலையில் உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. 


Advertisement