சினிமா

உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மாக மாறிய அனுஷ்கா..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

Summary:

உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை அனுஸ்கா.

உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை அனுஸ்கா.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஸ்கா. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நம்பர் ஒன் நாயகியாக வலம்வந்துகொண்டிருந்த அனுஸ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை கூட்டி, பின்னர் உடல் எடையை குறைக்கமுடியாமல் சிரமப்பட்டார்.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் கூட தொழிநுட்ப உதவியால் அனுஷ்காவை ஒல்லியாக காட்டி இருந்தது படக்குழு. அதன்பிறகு அதிக உடல் எடை காரணமாக அனுஸ்காவிற்கு பெரியதாக படவாய்ப்புகள் அமையவில்லை. அனுஷ்காவின் பெயரை சொன்னாலே தயாரிப்பாளர்கள் நோ சொல்லும் அளவிற்கு தள்ளப்பட்டார் அனுஸ்கா.

இதனிடையே பாகுபலி நாயகன் பிரபாஸுடன் அனுஷ்காவை சேர்த்து வைத்து காதல் கிசுகிசுக்களும் கொடிகட்டி பறந்தது. ஒருகட்டத்தில் இனி அனுஸ்கா அவ்வளவுதானா என வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு தற்போது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனுஸ்கா.

ஆம்.. தீவிர உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, யோகா என பலமுயற்சிகளை மேற்கொண்டு தற்போது மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement