தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை அனுஷ்கா...யார் படத்தில், எந்த நடிகருடன் தெரியுமா.?



Anushka act with AL Vijay movie in tamil

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனது உடல் எடை கூட்டி இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்திருந்தார்.

anushka

அதன்பிறகு தனது உடல் எடையை குறைக்க பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் பட வாய்ப்புகளும் பெரிய அளவில் வரவில்லை. இந்நிலையில் நடிகை அனுஷ்கா மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.