நடிகை கங்கனா ரணாவத்தை பற்றி சர்ச்சையான கருத்தை கூறிய அனுராக் கஷ்யப்..
நடிகை கங்கனா ரணாவத்தை பற்றி சர்ச்சையான கருத்தை கூறிய அனுராக் கஷ்யப்..

ஹிந்தி திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர். 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பை மையமாக வைத்துப் படம் இயக்கி, சர்ச்சைகளில் சிக்கினார்.
ப்ளாக் ஃப்ரைடே, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் போன்ற படங்களை இயக்கி பெரும் பிரபலமடைந்தார். இதில் இவரது ப்ளாக் ஃப்ரைடே படம் பல தேசிய விருதுகளை வென்றுள்ளது. இவர் தமிழில் "இமைக்கா நொடிகள்" படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து விஜய் சேதுபதியின் மகாராஜா, சுந்தர்.சியின் ஒன் டு ஒன் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கங்கனா ரனாவத்துடன் "குயின்" என்ற ஹிந்திப்படத்திலும் நடித்துள்ளார். அந்தப் படத்தில் நடிக்கும்போது நட்பாக இருந்த இருவரும் பின்னர் மோதிக்கொண்டனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனுராக் காஷ்யப், "கங்கனா ரனாவத் சிறந்த நடிகை. அவரது திறமையை யாரும் பறித்துவிட முடியாது. ஆனால் அவரை சமாளிப்பது கடினம்" என்று கங்கனா ரனாவத்தை பற்றி கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.