இந்த வயதிலும் குழந்தையை போல் பார்க்கில் விளையாடும் நடிகை.! வெளியான புகைப்படங்கள்..

இந்த வயதிலும் குழந்தையை போல் பார்க்கில் விளையாடும் நடிகை.! வெளியான புகைப்படங்கள்..


Anu hasen latest video

1995ம் ஆண்டு சுஹாசினி இயக்கிய "இந்திரா" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஹாசன். இவர் நடிகர் கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் ஆவார். நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நிகழ்ச்சித் தொகுப்பாளினி என பன்முகத் திறமை கொண்டவராக இருந்து வருகிறார் அனு ஹாசன்.

Anuhasan

தொடர்ந்து ஆளவந்தான் படத்தில் கமலுக்கு அம்மாவாகவும், மாதவனின் ரன், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் அக்கா ரோலிலும் நடித்துள்ள அனுஹாசன், மேலும் சில படங்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

"காபி வித் அனு" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற இவர், சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது 53 வயதாகும் அனுஹாசன், சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கிறார்.

Anuhasan

இந்நிலையில் தற்போது சிறு குழந்தைகள் போல் பார்க்கில் கம்பி மீது ஏறி விளையாடுவது, நடப்பது போன்ற சர்க்கஸ் காட்டும் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.