சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் சூப்பர் ஹிட் படத்தில் இணையும் அஞ்சலி! ஹீரோ இவர்தானா! வெளியான சூப்பர் தகவல்!

Summary:

Anjali join in telungu movie

பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் மற்றும் டாப்ஸி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான திரைப்படம் பிங்க். இந்த திரைப்படம் தான் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வையாக வெளியானது. 

இந்நிலையில் இதன் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மேலும் வக்கீல் சாப் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீராம் வேணுகோபால் இயக்குகிறார். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார்.

மேலும் டாப்சி கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் மற்றும் கீர்த்தி குர்ஹாரி நடித்த வேடத்தில் அஞ்சலி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படம் குறித்த முக்கியமான அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவித்துள்ளார்.

 


Advertisement