விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
ப்பா.. செம ஹாட்!! குட்டை டவுசரில் குதூகலமாக ஆட்டம் போடும் அஞ்சலி!! ரசிகர்களை கிறங்க வைத்த வீடியோ!!
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானாலும் அங்காடித்தெரு படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. அவர் எங்கேயும் எப்போதும், இறைவி, தூங்காநகரம், மங்காத்தா, தரமணி, கலகலப்பு உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை அஞ்சலி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் "வெர்டிஜ்" என்ற கனடிய வெப் தொடரின் ரீமேக்கான 'ஃபால்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
மேலும் அவருக்கு தற்போது சினிமாவில் பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் அஞ்சலி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவர் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு டவுசரில் ஊர் சுற்றிய மற்றும் கிளாமராக ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.