திருமணத்தன்று பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்,தனது கணவருடன் செய்த காரியத்தை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ..
தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் சினிமாக்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி தொலைக்காட்சியில் பல துறைகளில் வரும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் பிரபலமடைய செய்வது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
அவ்வாறு சில காலங்களுக்கு முன்பு மக்களிடையே பெருமளவில் பிரபலமாகி கொடிகட்டி பறந்தவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவரது அழகிற்கும் இனிமையான பேச்சு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். மேலும் இவரை வர்ணித்து ஏராளமான மீம்களை இளைஞர்கள் தெறிக்கவிட்டனர்.
இந்நிலையில் அனிதா சம்பத் தற்போது வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் சர்க்கார், வர்மா போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சில காலங்களுக்கு முன்பு இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த அனிதா சம்பத் ஒரு சில தினங்களுக்கு முன்பு தனது காதலன் பிரபாகரனை பெற்றோர்கள் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். அவரது திருமணத்தில் தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களது வரவேற்பு விழா மேடையில் புதுமண தம்பதியினர் இருவரும் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Wedding dance 💗💗💗💗 pic.twitter.com/QrUCeKIlrv
— Anitha Sampath (@anithasampath_) August 26, 2019