
பிக்பாஸ் அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராமில், உன்னை பார்க்க போகிறேன் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அனிதா சம்பத்திற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் .
இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆரம்பத்திலேயே அவர் சக போட்டியாளர்களுடன் வாக்குவாதம், கருத்து வேறுபாடு என பெரும் விமர்சனங்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் இந்த வாரம் ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், ஷிவானி, ரம்யா, நிஷா ஆகிய 7 பேரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராமில், காதல் என்பது... உன்னை பார்க்க போகிறேன் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்பது போல கூறி, 6ம் தேதியை குறிப்பிட்டுள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள், அனிதா போட்டியில் இருந்து வெளியேற போகிறாரா என கேட்க, அதற்கு அவர் நான் அனிதாவை மிகவும் மிஸ் செய்கிறேன். அவரது எலிமினேஷன் பற்றி இப்பொழுது தெரியாது. அதனால்தான் இப்படி பதிவிட்டேன். பயப்பட வேண்டாம் என விளக்கமளித்துள்ளார்.
Advertisement
Advertisement