சினிமா

அவரோட குரலை கேட்டே 100 நாளாச்சு.! அனிதா சம்பத் வீட்டில் நேர்ந்த எதிர்பாராத பெரும் துயரம்! கதறும் குடும்பத்தார்கள்!

Summary:

பிக்பாஸ் அனிதா சம்பத்தின் அப்பா ஆர்.சி சம்பத் மாரடைப்பு ஏற்பட்டு இன்று இயற்கை எய்தினார்

பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த  நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த அனிதா சம்பத், கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து  வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது அவர் இந்த புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாட விரும்புவதாக கூறியிருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் இன்று துக்கம் நிகழ்ந்துள்ளது. அனிதாவின் தந்தையும், எழுத்தாளருமான சம்பத் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனிதா, “எனது தந்தை சம்பத் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 62. அவர் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் பார்த்தேன். நான் பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன போது அவர் ஷீரடிக்கு சென்றிருந்தார். இன்று காலை அவர் ஷீரடியில் இருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.

anitha sampath father death: பிக் பாஸ் அனிதா சம்பத்தின் அப்பா திடீர் மரணம்!  - anitha sampath's father rc sampath passes away | Samayam Tamil

காலை 8 மணிக்கு இந்த செய்தியை கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் நம்ப முடியவில்லை. தந்தையின் குரலை கேட்டு 100 நாட்களுக்கு மேலாகிவிட்டது. தெரிஞ்சிருந்தா முன்னாடியே எலிமினேட் ஆகி அப்பா கூட கொஞ்சநாள் இருந்திருப்பேன். விஜய் டிவி ஷோ திரும்ப வரும் என் அப்பா இனி திரும்ப வர மாட்டாரு. இந்த வாரம் சேவாகி இருந்தால் கடைசியாக கூட அப்பாவை பார்த்திருக்க முடியாது. வாழ்க்கை என்பது மிகவும் கணிக்க முடியாத ஒன்று. இதெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது. உங்களின் பெற்றோர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். நான் என் அப்பாவை மிஸ் பண்ணிட்டேன்  என அனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த செய்தி அறிந்த அவரது ரசிகர்கள், அனிதாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.


Advertisement