அட.. செம மாஸ்.! ஆட்டோகாரனாக மாறிய அனிருத்.! இணையத்தை கலக்கும் அட்டகாச புகைப்படம்!!

அட.. செம மாஸ்.! ஆட்டோகாரனாக மாறிய அனிருத்.! இணையத்தை கலக்கும் அட்டகாச புகைப்படம்!!



anirudh-like-automan-photo-viral

சினிமா திரையில் தற்போது தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக கொடிகட்டி பறப்பவர் அனிருத். இவரது பாடல்கள் ரசிகர்களை துள்ளலாட்டம் போட வைக்கும். ரசிகர்களால் ராக்ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் அனிருத் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவந்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இவர் இசையமைத்த பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் செம ஹிட்டானது. தனது முதல் படத்திலேயே அவர் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் குறுகிய காலத்திலேயே டாப் இசையமைப்பாளர்களுள் ஒருவராக முன்னேறிய அவர் தற்போது ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்டோவில் காக்கி சட்டை அணிந்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதனுடன் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற, 'நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்' என்ற பாடலை இணைத்திருக்கிறார். செம மாஸாக இருக்கும் அந்தப் புகைப்படம் தற்போது
இணையத்தையே கலக்கி வருகிறது.