சினிமா

இந்தியன்-2 வில் கமலுக்கு வில்லன் இந்த முன்னணி மாஸ் நடிகரா? வெளியான செம சுவாரஸ்ய தகவல்!!

Summary:

anilkapoor villan to kamal

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம்  தற்போது தயாராகி வருகிறது. 

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால்,  ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவர்களுடன் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், நெடுமுடிவேண்டு, டெல்லி கணேஷ், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

kamal with anil kapoor க்கான பட முடிவு

மெகா கூட்டணியில் உருவாக்கி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.மேலும் அங்குள்ள ஜெயிலில் விசேஷ அனுமதி பெற்று படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுவந்த நிலையில் அனில்கபூர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனில் கபூர் ஏற்கனவே முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தில் நடித்துள்ளார்.
 


Advertisement