தங்கமான மனசு.. டிவி ஷோக்களுக்கு இடையே தொகுப்பாளினி பிரியங்கா செய்த காரியத்தை பார்த்தீங்களா!!

தங்கமான மனசு.. டிவி ஷோக்களுக்கு இடையே தொகுப்பாளினி பிரியங்கா செய்த காரியத்தை பார்த்தீங்களா!!


Anger priyanga went and meet cancer affected children

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் அனைத்து  நிகழ்ச்சிகளையும் கலகலப்பாக தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அதிலும் அவர் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் செம ஜாலியாக ஹிட்டாகும். 

பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். அதனைத் தொடர்ந்தும் அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது தம்பி மற்றும் அம்மாவுடன் வசித்து வரும் அவர் அவ்வப்போது தனது நண்பர்களுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில் பிரியங்கா அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டுள்ளார். Ray of Light Foundationக்கு சென்று அங்கு குழந்தைகளுடன் ஜாலியாக பேசி விளையாடி நேரத்தை செலவிட்டுள்ளார். மேலும் அப்பொழுது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விழிப்புணர்வு அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.