வெளிநாடு சென்று மேஜிக் வுமனாக மாறிய தொகுப்பாளினி ப்ரியங்கா.! வைரலாகும் வீடியோ!!

வெளிநாடு சென்று மேஜிக் வுமனாக மாறிய தொகுப்பாளினி ப்ரியங்கா.! வைரலாகும் வீடியோ!!



anger-priyanga-magic-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் ஃபேவரைட் தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அவர் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு இருக்கும்

பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையாக விளையாடி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். மேலும் இரண்டாவது இடத்தையும் பிடித்தார். அதுமட்டுமின்றி அவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அதில் தனது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் பிரியங்கா அங்கு மேஜிக் செய்வது போன்ற வேடிக்கையான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.