அச்சோ.. இன்னும் திருமணமாகாததற்கு இதுதான் பிரச்சினை! ஓபனாக போட்டுடைத்த ஆண்ட்ரியா!!Andrea talk about marriage

தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக தனது பயணத்தை தொடங்கி பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. அதனை  தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 

 மேலும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும் நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் கா மற்றும் பிசாசு 2 படத்தில் நடிக்கிறார். தற்போது 36 வயதாகும் ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியாவிடம் கேட்கப்பட்டுள்ளது.

Andrea

அப்பொழுது அவர், என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க. கல்யாணம் பண்ணணும்கிறதுக்காக ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிகொள்ள முடியாது. கல்யாணம் பண்ணிக்க போறவங்க தரமானவங்களா இருக்கணும் என கூறியுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா சில வருடங்களுக்கு முன்பு அரசியல்வாதி ஒருவரால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டதாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உளைச்சலுக்கு ஆளாகி சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.