நடிகர் விஜயை பார்க்கும்போது எங்களுக்கு அவரை பார்பதுபோலவே உள்ளது! ஆந்திர விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜயை பார்க்கும்போது எங்களுக்கு அவரை பார்பதுபோலவே உள்ளது! ஆந்திர விஜய் ரசிகர்கள்!


Andhra vijay fans compares vijay with super star bavan kalyan

தமிழ் சினிமாவின் தாரக மந்திரம் தளபதி விஜய். பாக்ஸ் ஆபீஸ் கிங் என அழைக்கப்படும் தளபதி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான துப்பாக்கி மற்றும் கத்தி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் சர்க்கார் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

படம் முழுவதும் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பதால் பல்வேறு தரப்புகளில் இருந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஒருவழியக்கா படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு  படம் மீண்டும் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. சர்க்கார் படத்திற்கு விஜய் ரசிகர்களிடம் இருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் தளபதி விஜய்.

Sarkar

அந்தவகையில் ஆந்திராவில் வெளியான சர்க்கார் திரைப்படம் இதுவரை 11 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை பார்த்து வரும் தெலுங்கு ரசிகர்கள் சர்கார் படத்தில் வரும் கதை தற்போது உள்ள நடைமுறை அரசியல் நிலைமையை எடுத்துரைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

அதே போல ஆந்திராவில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ள சர்கார் திரைப்படம் ஆந்திர ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெலுங்கின் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் பவன் கல்யாணுடன் நடிகர் விஜயை ஒப்பிட்டு புகழ்ந்துள்ளனர்