சினிமா

அன்புடன் குஷி சீரியலில் இனி குஷியாக நடிக்கவுள்ளது இவங்கதானாம்.! புகைப்படம் இதோ.

Summary:

Anbudan kushi serial changed heroine now

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் தான் அன்புடன் குஷி. அதில் நடிகர் பிரஜன் ஹீரோவாகவும், நடிகை மான்சி ஜோஷி ஹீரோயினாகவும் நடித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஏற்ப்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக சீரியல்கள் எடுக்க சில காலம் தடைவிதித்திருந்தது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் அதிகம் பாதிப்பு ஏற்ப்பட்ட சென்னை பகுதியில் மட்டும் ஊரடங்கு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்புடன் குஷி சீரியலில் குஷியாக நடித்த மான்சி ஜோஷிக்கு பதில் வேறு ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதிய குஷியின் புகைப்படத்தை அந்த சீரியலில் நடித்து வரும் அரவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம். 


Advertisement