பிக்பாஸ் பாவனி குறித்து அவரது முன்னாள் காதலர் வெளியிட்ட பதிவு! உருகி உருகி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!ananth-jai-post-about-bigboss-pavani

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 5 ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சின்னத்தம்பி தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர். மேலும் இவர் ரெட்டைவால் குருவி என்ற தொடரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பவானி ரெட்டி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 

 பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே இவருக்கென ஏராளமான ரசிகர்களும் ஆர்மியும் உருவானது. இந்நிலையில் கடந்த வாரம் டாஸ்க் ஒன்றில் அவர் தனது கணவர் குறித்தும் அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் கண்கலங்க கூறியிருந்தார். இது ரசிகர்களை வேதனையடைய வைத்தது. மேலும் இதற்கிடையில் கணவரின் இறப்பிற்குப் பின் பாவனி அவரது நண்பரான நடிகரும், தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய் என்பவரை காதலித்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவியது.

இந்நிலையில் பாவனியின் சகோதரி சிந்து என்பவர் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்தது உண்மைதான். ஆனால் அது கைகூடவில்லை. இருவரும் பரஸ்பரமாக பிரிந்துவிட்டனர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆனந்த் ஜாய் தற்போது தனது இன்ஸ்டாகிராமில், ராணி... எனக்கு டைப் செய்ய எந்த கடிதமும் இல்லை. தயவுசெய்து அவளுக்கு ஆதரவளிக்கவும். அவள் வாழ்க்கையில் நிறைய அனுபவித்திருக்கிறாள். அவள் என் சிறந்த தோழி மட்டுமல்ல, அதற்கும் மேல். துர்கா எனும் பாவனி ரெட்டி என்றென்றும்  உலகின் மிக அழகான நபர்  எனக் குறிப்பிட்டுள்ளார்.