#வீடியோ: சற்றுமுன் வலிமை படத்தில் இருந்து வெளியான அம்மா பாடல்!! வைரல் வீடியோ இதோ..



Amma song from valimai movie

வலிமை படத்தின் அம்மா பாடல் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

போனிகபூர் தயாரிப்பில், வினோத் இணையத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. படத்தின் வேலைகள் ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும், படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லை என அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இதனை அடுத்து படக்குழு சில போஸ்டர்களை வெளியிட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டுவந்தது. இதனை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் டிசம்பர் 5ஆம் தேதி மாலை இரண்டாவது சிங்கிள் ட்ராக் ஆக அம்மா பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வலிமை படத்தில் இருந்து அம்மா பாடல் லிரிக் விடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.