தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
சூப்பர்.. மனைவியுடன் இணைந்து பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவ் செய்யும் காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழகம் முழுவதும் கொரனோ இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவை ஏற்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பலருக்கும் தன்னார்வலர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அவ்வாறு ஏராளமான சீரியல்களிலும், சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான அமித் பார்கவ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி இருவரும் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிதி திரட்டி புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் கொரோனா மருத்துவ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், மற்றும் செறிவூட்டிகள் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அதனை வாங்கி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் அமித் பார்கவ், மக்களின் உயிர்காக்கும் இந்தப் பணியில் நல் உள்ளம் கொண்டோர் எங்களோடு இணைய வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.