இதற்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார்.! அடுத்தடுத்து இணையத்தில் பேசு பொருளாகும் இயக்குனர் அமீர்.!

இதற்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார்.! அடுத்தடுத்து இணையத்தில் பேசு பொருளாகும் இயக்குனர் அமீர்.!


amir-about-vijay-and-ajith

தமிழ் திரையுலகை பொருத்தவரையில் விஜய், அஜித் என்ற இருவரும் இரு துருவங்களாகவே இருந்து வருகிறார்கள். யார் பெயரை முதலில் சொல்வது என்பதிலேயே ரசிகர்களிடையே போட்டியும், பஞ்சாயத்தும்  ஆரம்பமாகி விடுகிறது. அந்தளவிற்கு இவர்களுடைய ரசிகர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள்.

Ajith

அஜித், விஜய் உள்ளிட்டோரின் ரசிகர்களிடையே அடிக்கடி ஏற்படும் சண்டை ஒருபுறம் காணப்பட்டாலும், இவர்கள் இருவரும் அவரவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். துணிவு திரைப்படத்தை முடித்த அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். அதேபோல விஜய் லியோ திரைப்படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான், தற்போது இணையதளத்தில் பேசு பொருளாக இருந்து வரும் இயக்குனர் அமீர் ஒரு கருத்தை வெளியிட்டார். அது தற்போது ட்ரெண்டாக தொடங்கிவிட்டது.. இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ஆதி பகவான் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த திரைப்படத்தில் அஜித் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அமீர் கூறியுள்ளார்.
.

Ajith

மேலும்  நடிகர் அஜித்தால் இரண்டு விதமான நடிப்பையும் வெளிப்படுத்த முடியும். ஆனால் விஜயால் அதை வெளிப்படுத்த முடியாது என்று அமீர் தெரிவித்துள்ளார்.