திருமணத்திற்கு முன்பே.. இப்படியொரு சூப்பரான விஷயமா?? அமீர்- பாவனிக்கு வாழ்த்துக்கள்!! வைரல் புகைப்படம்!!

திருமணத்திற்கு முன்பே.. இப்படியொரு சூப்பரான விஷயமா?? அமீர்- பாவனிக்கு வாழ்த்துக்கள்!! வைரல் புகைப்படம்!!


ameer-and-pavani-new-car

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதில் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து பிரபலமடைந்தவர் பாவனி. 

அவர் பிக்பாஸ் வீட்டில் தனது சகபோட்டியாளரான அமீருடன் நெருங்கி பழகி வந்தார். அமீர் பாவனியை காதலிப்பதாக ப்ரபோஸ் செய்தார். ஆனால் பாவனி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அமீரிடம் இருந்து விலகவும் இல்லை. அதனைத் தொடர்ந்து இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அமீர் தனது காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தநிலையில் பாவனி அதனை ஏற்றுக்கொண்டார்.

தற்பொழுது இவர்கள் திருமணம் குறித்து இணையத்தில் பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமீர் பாவனி இருவரும் இணைந்து புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள். அந்த காரின் பக்கத்தில் நின்று இருவரும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது தற்பொழுது பெருமளவில் வைரலாகி வருகின்றது.