பொங்கல் வின்னர் பட்டியலில் அமரன்.. எப்படி தெரியுமா? விபரம் உள்ளே.!



Amaran Movie Vijay TV TVR Points 8.5

 

 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் உட்பட பலர் நடித்து தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அமரன் (Amaran). இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார், சிஎச் சாய் ஒளிப்பதிவு பணிகளையும், கலைவாணன் எடிட்டிங் பணிகளையும் திறம்பட மேற்கொண்டு இருந்தனர். 

இதையும் படிங்க: அமரன் திரைப்படம் ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்; முக்கியப்புள்ளி கைது.!

வெற்றிப்படம் அமரன்

ரூ.150 கோடி செலவில், கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவான படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் உலகளவில் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. 

Amaran

ரேட்டிங்கிலும் அமரன் டாப்

இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிகையின்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அமரன் திரைப்படம், டிவிஆர் ரேட்டிங்கில் 8.5 என்ற உயரிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் வாயிலாக அமரன் திரைப்படத்தை, திரையரங்கில் மட்டுமல்லாது, பொங்கல் பண்டிகையன்று வீட்டிலும் பலரும் கண்டு மகிழ்ந்துள்ளனர். 

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; மனம்திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்.! பேசியது என்ன?